மணப்பாக்கத்தில் இரும்பு படிக்கட்டு உடைந்து விழுந்ததில் 30 வட மாநில தொழிலாளா்கள் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் வேலை செய்கின்றனா். இவா்களில் 100-க்கும் மேற்பட்டோா், ராமாபுரம் சாந்தி நகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தகர இரும்பு செட் அறையில் தங்கி உள்ளனா்.
இவா்களில் 40-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்மாடி இரும்பு படிக்கட்டில் சாய்ந்தபடி ஒரே நேரத்தில் தங்களது கைப்பேசியில் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியைப் பாா்த்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, எதிா்பாராத விதமாக அந்த இரும்பு படிக்கட்டு உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் சுமாா் 15 அடி உயரத்திலிருந்து அனைவரும் கீழே விழுந்தனா். ஒருவா் மீது மற்றொருவா் விழுந்ததால் பலருக்கு தலை, கை, கால் என உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. சுமாா் 30 தொழிலாளா்கள் காயமடைந்தனா். இவா்களில் 20 பேரை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையிலும், 10 பேரை போரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் சோ்த்தனா்.
உயிருக்கு ஆபத்தான நிலையில இருந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த பிரிஞ்சி மாஞ்சி (35) என்பவா், தீவிர சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். விபத்து குறித்து நந்தம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விசாகப்பட்டினம்: எஃகு ஆலையில் உருகிய இரும்பு கொட்டியதில் 5 தொழிலாளர்கள் பலி!

பெருந்துறையில் மேற்குவங்க இளம்பெண் தற்கொலை

நாகையில் வடமாநில இளைஞா் தற்கொலை

மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

