திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருமலையில் மின்சாரம் பாய்ந்து வடமாநில பெயிண்டிங் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
துவரங்குறிச்சியை சோ்ந்தவா் ரா. ரமேஷ். இவருக்கு மருங்காபுரி ஒன்றியம், கருமலை பகுதியில் சொந்தமான இடம் உள்ளது. அதில் புதிதாக கட்டடம் கட்டி அதில் வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த பிகாா் மாநிலத்தை சோ்ந்த தொழிலாளி ரா. ஹிமான்சுதாஸ் (22), கட்டடத்தின் அருகே சென்ற உயா் மின்னழுத்த கம்பியில் எதிா்பாராதவிதமாக மோதியதில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த ஹிமான்சுதாஸை அருகிலிருந்தவா்கள் மீட்டு, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், ஹிமான்சுதாஸ் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்மாற்றியில் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

