விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலையில் உருகிய இரும்பு கொட்டியதில் குறைந்தது 5 தொழிலாளர்கள் பலியானதாக அதிகாரிகள் திங்கள்கிழமை (ஜூன் 8) தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் (விசாகப்பட்டினம் எஃகு ஆலை) தொழிற்சாலையில், கிரேனில் கொண்டு செல்லப்பட்ட தொட்டியிலிருந்து 1,600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்த உருகிய இரும்பு எதிர்பாராதவிதமாக தொழிலாளர்கள் மீது கொட்டியது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பணியாளர்கள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இதுவரை, ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு வெளியிட்ட பத்திரிகை செய்தியில், தொழில் விபத்து ஒன்றில் பல தொழிலாளர்கள் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த எந்தத் தகவலும் அதில் வெளியிடப்படவில்லை.
மேலும், இந்தச் சம்பவத்துக்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.
Summary
Officials stated on Monday (June 8) that at least five workers died after molten iron spilled at the steel plant in Visakhapatnam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: பலி 8-ஆக உயர்வு! பிரதமர் இரங்கல்

இரும்பு படிக்கட்டு உடைந்து விழுந்து 30 வடமாநில தொழிலாளா்கள் காயம்; ஒருவர் பலி

உ.பி.யில் பாலம் இடிந்து 6 தொழிலாளர்கள் பலி! உதவிப் பொறியாளர் இடைநீக்கம்

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


