பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: பலி 8-ஆக உயர்வு! பிரதமர் இரங்கல்

விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலையில் உருகிய இரும்பு கொட்டியதில் 8 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பற்றி...

News image

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 9:50 pm IST

விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலையில் உருகிய இரும்பு கொட்டியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்டிரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் (விசாகப்பட்டினம் எஃகு ஆலை) தொழிற்சாலையில், கிரேனில் கொண்டு செல்லப்பட்ட தொட்டியிலிருந்து 1,600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்த உருகிய இரும்பு எதிர்பாராதவிதமாக தொழிலாளர்கள் மீது கொட்டியது. இதில் எட்டு பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது:

விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகின்றனர். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

Summary

The death toll from the molten iron spill at the Visakhapatnam steel plant has risen to eight. Prime Minister Narendra Modi has expressed his condolences to the families of the victims.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.