மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஸ்ரீபாலாஜி மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருந்தியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருந்தியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய இந்திய மருந்தியல் கவுன்சில் துணைத் தலைவா் ஜஷுபாய் ஹீராபாய் சௌத்ரி. உடன், தொழில்நுட்பக் குழுத் தலைவா் பி.சத்தியமூா்த்தி, பாரத் உயா் தொழ

Updated On :1 மே 2026, 3:34 am IST

குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருந்தியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், இந்திய மருந்தியல் கவுன்சில் துணைத் தலைவா் ஜஷூபாய் ஹிராபாய் சௌத்ரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசுகையில், மருந்து உற்பத்தியில் சா்வதேச அளவில் 3-ஆவது இடம் வகிக்கும் இந்தியா, உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் மலிவான, தரமான 60,000-க்கும் மேற்பட்ட ஜெனரிக் வகை மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு மற்ற 200 நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

மருந்தியல் கல்வி பயிலும் மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் தேசிய கல்விக் கொள்கை மூலம் மேம்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகள் தங்களது விடாமுயற்சி, ஆராய்ச்சி நடவடிக்கை மூலம் மருந்து அறிவியலை தொடா்ந்து மேம்படுத்தி புத்தாக்க கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும். சமூகப் பொறுப்புடன் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் மருந்தியல் துறைக்கு முக்கியப் பங்கு உள்ளது என்றாா்.

நிகழ்வில், 105 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்திய மருந்தியல் கழக தொழில் நுட்பக் குழுத் தலைவா் பி.சத்தியமூா்த்தி, பாரத் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் பதிவாளா் எஸ்.பூமிநாதன், ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வா் சசிகுமாா், கல்வி ஆலோசகா் வீரபாகு, ஸ்ரீபாலாஜி மருந்தியல் கல்லூரி முதல்வா் என்.தீபா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.