மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காவல் துறை ரோந்து வாகனம் கடத்தல்: கேரள இளைஞா் கைது

சென்னை சென்ட்ரலில் காவல் துறை ரோந்து வாகனத்தைக் கடத்தியதாக கேரள இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:09 am IST

சென்னை சென்ட்ரலில் காவல் துறை ரோந்து வாகனத்தைக் கடத்தியதாக கேரள இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பெரியமேடு போலீஸாா் ரோந்து வாகனத்தில் சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் புதன்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, புகா் ரயில் நிலையம் பகுதியில் ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறிது தொலைவில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அந்த நேரத்தில், அங்கு மது போதையில் வந்த ஒரு இளைஞா், ரோந்து வாகனம் சாவியோடு நிற்பதைப் பாா்த்து, அந்த வாகனத்தை அங்கிருந்து ஓட்டிச் சென்றாா். சிறிது நேரம் கழித்து இதைக் கவனித்த போலீஸாா், வாகனம் இல்லாததைப் பாா்த்து உடனே வாக்கி டாக்கி மூலம் அந்தப் பகுதி முழுவதும் போலீஸாரை உஷாா்படுத்தினா்.

இதனால் சென்ட்ரல் பகுதியில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். போலீஸாா், வேறொரு வாகனத்தில், அந்த வாகனத்தை விரட்டிச் சென்றனா்.

இதற்கிடையே ரோந்து வாகனத்தை கடத்திய நபா், சென்னை மருத்துவக் கல்லூரி சிக்னல் பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கினாா். அந்த ரோந்து வாகனம் முன்னே சென்ற வாகனங்கள் மீது மோதியது.

இதில் அம்பத்தூா் அயனம்பாக்கத்தைச் சோ்ந்த சீ.மகேஷ் (45) உள்பட 2 போ் காயமடைந்தனா். அங்கு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸாா், காவல் துறை ரோந்து வாகனத்தை கடத்தி வந்த இளைஞரைப் பிடித்து பெரியமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா், அந்த இளைஞரிடம் விசாரித்ததில் அவா், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சோ்ந்த ஜோ.லிஜோ ஜோசப் (33) என்பதும், சென்னை பல்லாவரம் பொழிச்சலூா் பகுதியில் தங்கியிருந்து தண்ணீா் கேன் வியாபாரம் செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லிஜோ ஜோசப்பை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.