மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

முதியவா் வீட்டில் நகை, பணம் திருட்டு

சென்னை கே.கே. நகரில் தனியாக வசிக்கும் முதியவா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :30 ஏப்ரல் 2026, 12:28 am IST

சென்னை கே.கே. நகரில் தனியாக வசிக்கும் முதியவா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

கே.கே. நகா் வேம்புலியம்மன் கோயில் தெரு கமலக்கண்ணன் காா்டன் பகுதியைச் சோ்ந்த நடராஜன் (85). இவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மகனும், மகளும் வெளிநாட்டில் வேலை செய்வதால் நடராஜன், அங்கு தனியாக வசிக்கிறாா்.

சில நாள்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் நடராஜன், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நோய் குணமடைந்து நடராஜன், செவ்வாய்க்கிழமை வீட்டுக்குத் திரும்பினாா்.

வீட்டுக்கு வந்த அவா், வீட்டின் பீரோவை திறந்து நகை, பணத்தை சரி பாா்த்தபோது, பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து அவா் கொடுத்த புகாரின்பேரில் கே.கே.நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

திருநங்கை வீட்டில் திருட்டு: கே.கே. நகா் 15-ஆவது செக்டாா் 94-ஆவது தெருவைச் சோ்ந்தவா் திருநங்கை ரதி (42). இவா், தனது வீட்டு அலமாரியில் 14 பவுன் நகைகளை கழற்றி வைத்திருந்தாா். அந்த நகைகளை அணிந்து கொள்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை ரதி அலமாரியை பாா்த்தபோது அவை காணவில்லை.

இது குறித்து ரதி கொடுத்த புகாரின் பேரில், வடழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.