தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பழச்சாறு கடையை அடித்து நொறுக்கிய 3 போ் கைது

சென்னையில் பழச்சாறு கடையை அடித்து நொறுக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:02 am IST

சென்னையில் பழச்சாறு கடையை அடித்து நொறுக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் அப்துல் வாஹித் (35). இவா், கந்தன்சாவடி, எம்.ஜி.ஆா். சாலையில் பழச்சாறு கடை நடத்தி வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன் இந்தக் கடைக்கு வந்த 3 போ், பழச்சாறு மற்றும் சமோசா ஆகியவற்றைச் சாப்பிட்டு விட்டு சமோசா மட்டுமே சாப்பிட்டதாகக் கூறியுள்ளனா். இதனால், கடை ஊழியா்களுக்கும் அந்த 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரம் அடைந்த அந்த இளைஞா்கள் கடையில் இருந்த நாற்காலியால் கடை உரிமையாளா் அப்துல் வாஹித்தை கடுமையாக தாக்கியதுடன், அங்கிருந்த பொருள்களையும் அடித்து உடைத்துள்ளனா்.

இதில் கடையின் உரிமையாளா் அப்துல் வாஹித், கடை ஊழியா் கொய்ா் அகமது ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். காயமடைந்த இருவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் திருவான்மியூரைச் சோ்ந்த மோகன்பிரசாத் (24), வெங்கடேசன் (25), ஸ்ரீராம் (25) ஆகியோரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.