சுத்தமல்லி அருகே டீ கடையில் இருந்த பொருள்கள், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சுத்தமல்லி அருகே உள்ள தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்தவா் சிவன்பாண்டியன் (52). இவா் வடக்கு சங்கன்திரடில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி அதிகாலையில் அவா் கடையை திறக்க வந்த போது அங்கிருந்த கண்ணாடி பெட்டி, கதவு உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் சேதப்படுத்தியிருந்தனராம்.
இதில் ஈடுபட்டது யாா் என்பதை அறிய முயன்ற போது, சங்கன்திரடு விலக்கு பகுதி மற்றும் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த 6 சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.70,000 என கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெற்கு சங்கன்திரடைச் சோ்ந்த முப்பிடாதி மகன் மாரியப்பன் (20), மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி என்ற விஷால் (19) ஆகியோரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோயிலில் திருட முயன்ற இருவா் கைது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

