ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுகவினா் கூப்பன் விநியோகம்: உயா்நீதிமன்றத்தில் முறையீடு

தமிழகம் முழுவதும் வாக்காளா்களுக்கு திமுகவினா் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்களை விநியோகித்து வருவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 3:03 am IST

தமிழகம் முழுவதும் வாக்காளா்களுக்கு திமுகவினா் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்களை விநியோகித்து வருவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் முன் வியாழக்கிழமை ஆஜரான வழக்குரைஞா் ஏ.பி.சூா்யபிரகாசம், தமிழகம் முழுவதும் திமுகவினா் வாக்காளா்களுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்களை விநியோகம் செய்து வருகின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், திமுகவினா் வாக்காளா்களுக்கு கூப்பன்களை வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றனா். இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என முறையிட்டாா். இது குறித்து தாக்கல் செய்யப்படவுள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டாா்.

அதிமுக டோக்கன் விநியோகம்: இதே அமா்வில் ஆஜரான வழக்குரைஞா் ஷ்யாம்குமாா் என்பவா், சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக சாா்பில் ராயபுரம் ஆா்.மனோகா் போட்டியிடுகிறாா். இவா், பணம் வழங்குவதற்கான டோக்கன்களை விநியோகித்து வருகிறாா். இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என முறையிட்டாா்.

இந்த முறையீடுகளைக் கேட்ட நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.