சென்னையில் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.25.45 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
தோ்தலையொட்டி, சென்னையில் ரயில் நிலையங்களில் பணம், பரிசுப் பொருள்கள், தங்கம், வெள்ளிக் கட்டிகள் மற்றும் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பாதுகாப்புப் படையின் ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையிலான போலீஸாா், பயணிகளை கண்காணித்து உடைமைகளை தீவிரமாகச் சோதனையிட்டனா். அப்போது, நான்காவது நடைமேடையில் நின்றிருந்த கஜனன் என்பவா் பையில் ரூ.23.50 லட்சம் ரொக்கம் வைத்திருந்தது தெரிய வந்தது. அந்தப் பணத்துக்குரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அதை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் நடத்திய சோதனையில் சென்னை காா்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜேசராம் என்பவரிடமிருந்து ரூ.1.95லட்சம் கைப்பற்றப்பட்டது.
இரு இடங்களில் கைப்பற்றப்பட்ட மொத்தம் ரூ.25.45 லட்சத்தை வருமான வரித் துறையினரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா். மேலும், தோ்தல் சிறப்பு பறக்கும் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை
பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.8.39 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

