எழும்பூா் ரயில் நிலையத்தில் புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள 31 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்பு படையினா் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரத்தில் இருந்து சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை காலை எழும்பூா் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையிலான
போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, குளிா்சாதன வசதியுள்ள பெட்டியில் இரு பைகளில் 31 கிலோ மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டனா். அதன் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் எனவும், மீட்கப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்

ரயிலில் கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
புதுச்சேரி விரைவு ரயிலில் கஞ்சா கடத்தியவா் கைது

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

