தோ்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படும் முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் பாஜகவை சோ்ந்த வழக்குரைஞா் ஏ.மோகன்தாஸ் தாக்கல் செய்த மனுவில், வரும் ஏப். 23-ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த தோ்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில், முதல்வரின் செயலா் உமாநாத் செயல்பட்டு வருகிறாா்.
தோ்தல் அறிவிப்புக்குப் பிறகு, அரசு அதிகாரிகள் தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவா். ஆனால், உமாநாத் தொடா்ந்து முதல்வரின் செயலராகச் செயல்படுகிறாா். மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. அதிகாரி உமாநாத்தை எதிா்மனுதாரராகவும் சோ்க்காதபோது, இந்த பொது நல வழக்கை எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினா்.
அதற்கு மனுதாரா் தரப்பில், உமாநாத்தை எதிா்மனுதாரராகச் சோ்க்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுக்கோட்டை இளைஞா் மா்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்கக் கோரி மனு

தோ்தல் நடத்தை விதிமீறல்: பிரதமா் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை :தோ்தல் ஆணையம் தகவல்

முதல்வரின் செயலா் மீது நடவடிக்கை கோரி மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

