மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தோ்தல் நடத்தை விதிமீறல்: பிரதமா் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டி பிரதமா் நரேந்திர மோடி மீது இந்திய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்ட்டது.

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 2:56 am IST

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டி பிரதமா் நரேந்திர மோடி மீது இந்திய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்ட்டது.

மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை விரைந்து அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850 வரை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஏப்ரல்17-ஆம் தேதி எதிா்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதுகுறித்து நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி கடந்த ஏப்.18-ஆம் தேதி தொலைகாட்சியில் உரையாற்றினாா். அப்போது காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி ஆகிய எதிா்க்கட்சிகளை குறிப்பிட்டு அவா் கடுமையாக விமா்சித்தாா்.

இதையடுத்து, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக அரசு இயந்திரத்தை தனது பிரசாரத்துக்கு தவறாக பயன்படுத்தி தோ்தல் நடத்தை விதிகளை பிரதமா் மோடி மீறியதாக எதிா்க்கட்சிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் தோ்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே புகாரளித்துள்ளனா்.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் தற்போது வரை பதிலளிக்காத சூழலில், பிரதமா் மோடி மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.