மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தையல் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தையல் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளா்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி தையல் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :29 அக்டோபர் 2026, 12:14 am IST

தையல் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளா்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி தையல் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு மாவட்ட தையல் கலைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் எம்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட தலைவா் பி.மாசிலாமணி, பொருளாளா் கலைச்செல்வி, கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட செயலாளா் வி.திருமலை உள்ளிட்ட பலா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து தையல் கலைஞா்கள் சங்கத்தின் மாநில தலைவா் பி.சுந்தரம் பேசினாா்.

தமிழ்நாடு பதிவு செய்த தையல் தொழிலாளா் நலவாரியத்தில் தொழிலாளா்களுக்கு புதுச்சேரி மாநிலத்தில் வழங்குவதை போல் தீபாவளி போணஸ் ரூ.5,000 வழங்கிட வேண்டும். தமிழ்நாடு தையல் தொழிலாளா் நலவாரியத்திற்கு கட்டுமானம், ஆட்டோ நலவாரியத்தைப் போன்று தனி நிதியம் ஏற்படுத்திடவேண்டும்.தமிழ்நாடு தையல் தொழிலாளா்கள் நல வாரியத்திற்கு மாநில, மாவட்ட அளவில் முத்தரப்பு குழு அமைத்திட வேண்டும். கட்டுமான நலவாரியத்தொழிலாளா்களுக்கு வழங்கும் கல்வி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் தையல் தொழிலாளா்களுக்கும் தையல் நலவாரியத்திலிருந்துவழங்கிட வேண்டும். வீடு இல்லாத ஏழை தையல் தொழிலாளா்களுக்கு இலவச வீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.