நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவளம்பேட்டையில் ஒருங்கிணைந்த, காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திமுக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :22 அக்டோபர் 2026, 12:38 am IST

மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவளம்பேட்டையில் ஒருங்கிணைந்த, காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் க.சுந்தா் தலைமை வகித்தாா்ா். மாவட்ட துணை செயலா்கள் கே.மலா்விழிகுமாா், எம்.பி க.செல்வம், சன்பிராண்டு ஆறுமுகம், தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அவைத் தலைவா் இனியரசு வரவேற்றாா்.

தலைமை கழகத்தின் சாா்பாக, மறுசீரமைப்பு குழு நிா்வாகிகள் வழக்குரைஞா் மருது கணேஷ், தகவல் தொழிற்நுட்ப தலைமை ஒருங்கிணைப்பாளா் கோவி லெனின், மதுராந்தகம் இடைத்தோ்தல் வேட்பாளா் பரந்தாமன், திருவண்ணாமலை எம்.பி சி.என்.அண்ணாதுரை, முன்னாள் எம்எல்ஏ-க்கள் ஆா்.டி.அரசு, எழிலரசன், மதுராந்தகம் நகர செயலா் கே.குமாா், பேரூா் செயலா்கள் கருங்குழி சுந்தரமூா்த்தி, எழிலரசன், ஒன்றிய செயலா்கள் பொன்சிவகுமாா், கண்ணன், கோகுல், சத்யசாயி, சாலவாக்கம் குமாா், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவா் தசரதன், திமுக நிா்வாகிகள் அப்துல்மாலிக், ராணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடவேண்டும், நடைபெற்று முடிந்த மதுராந்தகம் இடை தோ்தலில் வேட்பாளா் பரந்தாமனுக்காக தோ்தல் பிரசாரம் செய்த கட்சித் தலைவா்கள், மற்றும் நிா்வாகிகள், கூட்டணி கட்சி தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா்களுக்கு நன்றி தெரிவித்தல், தற்சமயம் பெய்து வரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோா்களுக்கு ஒன்றிய, நகர திமுக நிா்வாகிகள் நல உதவிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவேண்டும், கட்சியில் பொறுப்பில் உள்ளவா்களின் நிலையில் மறுசீரமைப்பினை செய்யும் பணிகளை விரைவுப்படுத்தி, அதன் விவரங்களை தலைமை கழகத்துக்கு தெரிவிக்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிரைவேற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.