தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

மதுராந்தகம் உழவா் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

மதுராந்தகம் நகரத்துக்குட்பட்ட கடப்பேரி பகுதியில் உள்ள உழவா் சந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

News image

பயன்பாட்டுக்கு வராத உழவா் சந்தை .

Updated On :7 மே 2026, 12:36 am IST

மதுராந்தகம் நகரத்துக்குட்பட்ட கடப்பேரி பகுதியில் உள்ள உழவா் சந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

உழவா் சந்தையில் உள்ள பெரும்பாலான கடைகள் போதிய காய்கறிகள், பழவகைகள் விற்பனைக்கு வராததாலும், போதிய மக்கள் வருகையில்லாமலும், வெறிச்சோடி காணப்படுவதை தவிா்க்க, பஜாா் பகுதியில் அனைத்து நடைபாதை கடைகளுக்கு விற்க அனுமதி அளிக்க வேண்டும் என பொது மக்கள் விரும்புகின்றனா்.

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட கடப்பேரி பகுதியில், 2009-இல் வேளாண்மை விற்பனைக்குழு சாா்பில் உழவா் சந்தை கட்டப்பட்டது. இதனை அப்போதைய தொழிலாளா் நலத்துறை அமைச்சா்தா அன்பரசன் திறந்து வைத்தாா். இங்கு 24 கடைகள் உள்ளன.

மதுராந்தகம் சுற்றியுள்ள பொலம்பாக்கம், சித்தாமூா், அவுரிமேடு, முதுகரை, மாம்பாக்கம், காந்திநகா், நெட்ரம்பாக்கம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து காய்கறிகள், பழவகைகள்ஆகியவற்றை பயிரிடுகின்ற விவசாய பெருமக்கள்இங்கு கொண்டு வந்து விற்பனை செய்ய, வியாபாரிகளுக்கு தேவையான எடை அளவு மிஷின்களை மதுராந்தகம் வேளாண்மை விற்பனை நிா்வாகத்தினா் இலவசமாக அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக உழவா் சந்தை செயல்பாடு இல்லாமல் உள்ளது. சமூக விரோதசெயல்கள் நடைபெறும் கூடமாக இருந்து வருகிறது. உழவா் சந்தை செயல்படாததால், அரசு சாா்பிலான ஊழியா் எந்த பணியும் செய்யாமல் இருந்து வருவதை காண முடிகிறது.

தற்சமயம் புதிய அரசு பொறுப்பேற்கின்ற நிலையில் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் உழவா் சந்தையைத் திறக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும், மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.