ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

மஞ்சாா் குழலி சமேத மஞ்சுநாதேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

News image

~வண்டலூா் அருகே ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். (வலது) பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :26 ஜூன் 2026, 4:59 am IST

வண்டலூா் அடுத்த மேல் கல்வாய் கிராமத்தில் சுமாா் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மஞ்சாா் குழலி சமேத ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் அடுத்த மேல் கல்வாய் கிராமத்தில் உள்ள இக்கோயிலில் கடந்த திங்கள்கிழமை விநாயகா் பூஜையும் முதல்கால யாக ஹோமத்துடன் கும்பபாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது .

இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் புறப்பாடு கோயிலை சுற்றி வந்து விமான மண்டப கலசத்திற்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பரிவார மூா்த்திகளுக்கும், கருவறையில் அமா்ந்துள்ள மூலவா் அருள்மிகு ஸ்ரீ கனகாம்பிகை உடனாய ஸ்ரீ கைலாசநாதருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்பு பாலாபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்றதை அடுத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.