ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

காஞ்சிபுரம் அகத்தீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்பிகை சமேத அகத்தீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பற்றி..

News image

அகத்தீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் - file photo

Updated On :25 ஜூன் 2026, 12:05 pm IST

பெரிய காஞ்சிபுரம் காமாட்சி அம்பிகை சமேத அகத்தீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் உபநிஷத் பிரம்மேந்திர மட வளாகத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரர் சுவாமி, ஹயக்ரீவர் சுவாமி, ஸ்ரீ ராமச்சந்திர ஸ்வாமி மற்றும் ஸ்ரீ ராமயந்திரம் ஆகியனவற்றுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை ஆகியவை இம்மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து, வியாழக்கிழமை மகாபூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்று யாக சாலையில் இருந்து புனித நீர் குடங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கும்பாபிஷேகத்தினை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சங்கர விஜயந்திர சரஸ்வதி சுவாமிகள் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

இக்கோயிலில் உள்ள ராம எந்திரம் போன்று தயாரிக்கப்பட்டு காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இருந்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டு அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் மூலவர் ராமருக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கும்பாபிஷேகத்தை அடுத்து மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், மகாதீப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்கள் அனைவருக்கும் ஆசியுரை வழங்கினார்.

முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.