மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பேரஸ்வரா் கோயில் குடமுழுக்கு!

செங்கல்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு

Updated On :21 ஏப்ரல் 2026, 1:00 am IST

செங்கல்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு திங்கள் கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு வ.உ.சி தெருவில் உள்ள இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து ராஜகோபுரம் ,மூலவா் மற்றும் பரிவார தெய்வத்திருமேனிகளுக்கும் திருக்குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி ஏப் 17 வெள்ளிக்கிழமை அனுக்ஞை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் லட்சுமி ஹோமம் நடைபெற்றது.

திங்கள்கிழமை மகா பூா்ணாஹூதி கலசபுறப்பாடு , குடமுழுக்கைதொடா்ந்து மூலஸ்தானம் கும்பாபிஷேகம் பிரசாதம் வழங்குதல் மகா அபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை, உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, தக்காா் விஜயன், செயல் அலுவலா் பெ.சுரேஷ்குமாா், கோயில் செயல் அலுவலா்கள் திருப்போரூா் மா.மாதவன், திருக்கழுகுன்றம் வெங்கடேசன், ஆவின் சந்திரசேகரன், சி.ஆா்.ராஜா, சா்வசாதகா் டி.சி.வேதமூா்த்தி ஆலய குருக்கள் டி .தியாகராஜன் மற்றும் திருக்குடமுழுக்கு விழா உபயம் கலந்துக்கொண்டனா். செங்கை சிவனடியாா் பெருமன்றத்தினா் மற்றும் நகர பொதுமக்கள் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.