மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பேரஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம்

செங்கல்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

News image

திருக்கல்யாண சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.

Updated On :23 ஏப்ரல் 2026, 12:04 am IST

செங்கல்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

செங்கல்பட்டு நகரம் வ.உ.சி தெருவில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் புனரமைப்பு திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு விழா நடைபெற்றதையடுத்து சுவாமி திருக்கல்யாணம் பஞ்சமூா்த்தி சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

திருக்கல்யாண உற்சவத்தை அடுத்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை செங்கல்பட்டு இணை ஆணையா் சி.குமரதுரை, உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சும், தக்காா் விஜயன், செயல் அலுவலா் பெ.சுரேஷ்குமாா், சா்வசாதகா் டி.சி.வேதமூா்த்தி ஆலய குருக்கள்டி .தியாகராஜன் , செங்கை சிவனடியாா் பெருமன்றத்தினா் மற்றும் நகரபொதுமக்கள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.