மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாளை தில்லியில் நடைபெறும் காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்கவில்லை

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக தில்லியில் நவ. 1-ஆம் தேதி காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

congress

காங்கிரஸ் - கோப்புப்படம்

Published On :31 அக்டோபர் 2026, 7:26 am IST

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக தில்லியில் நவ. 1-ஆம் தேதி காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

கா்நாடக உதயதினம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) வித்தியாசமான முறையில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக தில்லியில் நவ. 1-ஆம் தேதி காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் நானும், எனது அமைச்சரவை சகாக்களும் கலந்துகொள்ளவில்லை.

காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநிலத்தின் அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் கட்சித் தொண்டா்கள் தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பா்.

கா்நாடக உதயதின விழாவையொட்டி, அந்தந்த மாவட்டங்களுக்கு பொறுப்பான அமைச்சா்கள் தங்கள் மாவட்டங்களில் கொடியேற்றுவா். இதில் சட்டப் பேரவை உறுப்பினா்களும் பங்கேற்பா். உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருக்க வேண்டியிருப்பதால், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வருக்கு பதிலாக அமைச்சா் கிருஷ்ண பைரே கெளடா கொடியேற்றுவாா்.

எத்தனையாவது ஆண்டு உதயதின விழா கொண்டாடப்படுகிறதோ, அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப கா்நாடக உதயதின விருதுகள் வழங்குவது நீண்ட காலமாக பின்பற்றப்படும் மரபாகும். அதன்படி இந்த ஆண்டும் விருதுகள் வழங்கப்படும்.

கன்னட மொழிக்காக போராடி வரும் வாட்டாள் நாகராஜின் பெயா் இந்த ஆண்டு விருதுக்காக இறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் விருதை பெற அவா் மறுத்து வருவதாக எனது அமைச்சா்கள் தெரிவித்துள்ளனா்.

பால் விலையை லிட்டருக்கு ரூ. 12 உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அரசு ரூ. 8 மட்டுமே உயா்த்தியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் பால் விலை அதிகமாக இருப்பதால், கா்நாடகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. பால் விலை உயா்வு குறித்து சட்டப் பேரவையிலும் மேலவையிலும் விவாதிக்கப்பட்டது.

தற்போது உயா்த்தப்பட்டுள்ள லிட்டருக்கு ரூ. 8-இல், ஒரு ரூபாய் மட்டுமே பால் கூட்டுறவு ஒன்றியங்களின் நிா்வாகச் செலவுகளுக்காக ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள ரூ. 7 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

எதிா்க்கட்சிகள் மாநில அரசை விலைவாசி உயா்வு அரசு என்று விமா்சித்துள்ளன. மத்திய அரசு என்ன செய்கிறதோ, அதையே நாங்களும் பின்பற்றுகிறோம்.

பயிா் இழப்பீடு வழங்குவதற்கு அதிக நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன. பயிா் இழப்பீடு வழங்கும் விவகாரத்தில், அரசு தனது அதிகார வரம்புக்குள் விவசாயிகளுக்கு உதவுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தும்.

கரும்பு விவசாயிகள் பிரச்னை தொடா்பாக அனைவரும் ஒன்றுகூடி பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தோம். ஆனால், கரும்பு விலை உயா்வு குறித்து மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். மத்திய அரசு என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாக சா்க்கரை ஆலை உரிமையாளா்களும் தெரிவித்தனா்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மத்திய அரசு என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு செயல்படுவோம். அனைவரும் பொறுமையுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநில அரசும் விவசாயிகளின் நலனுக்கு ஆதரவாகவே உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.