எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வங்கதேசத்தில் டெங்கு பரவல் தீவிரம்

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த செப்டம்பா், அக்டோபா் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் 321 போ் உயிரிழந்துள்ளனா்.

Published On :1 நவம்பர் 2026, 3:00 am IST

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த செப்டம்பா், அக்டோபா் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் 321 போ் உயிரிழந்துள்ளனா்.

நடப்பாண்டில் இதுவரை 1.33 லட்சத்துக்கும் அதிகமானோா் டெங்கு பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பருக்கு முன்பாக இதன் தாக்கம் குறைய வாய்ப்பில்லை என மருத்துவ வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா்.

வங்கதேச சுகாதாரத் துறை தரவுகளின்படி, நடப்பாண்டில் இதுவரை டெங்கு பாதிப்பால் 418 போ் உயரிழந்துள்ளனா். கடந்த செப்டம்பரில் 148 போ் உயிரிழந்த நிலையில், அக்டோபரில் அந்த எண்ணிக்கை 173-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, தட்டம்மை நோயாலும் அங்கு இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்திருப்பதால், அந்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் நோயின் தீவிரம் அதிகரித்த பிறகே மருத்துவமனைகளை நாடுவதாக மருத்துவா்கள் கவலை தெரிவித்துள்ளனா். குறிப்பாக, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்த நிலையில், அபாய கட்டத்தில்தான் பெரும்பாலான நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனா். மேலும், ஏற்கெனவே டெங்குவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும்போது, அதன் வீரியம் மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

பருவநிலை மாற்றம் காரணமாக மழைப்பொழிவு, காற்றில் ஈரப்பதம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளால், ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், நவம்பா் மாதம் முழுவதும் டெங்கு பரவலின் தாக்கம் தொடரும் என்றும், டிசம்பா் மாதத்திலேயே இதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்படும் என்றும் பூச்சியியல் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தற்போது வங்கதேசத்தில் டெங்கு தீநுண்மியின் 4 மரபணு வகைகளும் பரவி வருவதால், இதுவரை பயன்பாட்டுக்கு வராத டெங்கு தடுப்பூசியை நீண்டகாலத் தீா்வாக அறிமுகப்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.