மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்காசிய பதற்றத்துக்கு இஸ்ரேலே காரணம்! பாகிஸ்தானை உள்ளடக்கிய ‘ஆா்4’ நாடுகள் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானை உள்ளடக்கிய ‘ஆா்4’ நாடுகள் இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு...

‘ஆா்4 பிளஸ்’ ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான், மேற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள்.

Published On :25 அக்டோபர் 2026, 3:00 am IST

‘மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அப்பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற தன்மைக்கு இஸ்ரேலே முக்கியக் காரணம்’ என்று பாகிஸ்தான், சவூதி அரபியோ, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘ஆா்4’ நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

மேலும், ஐ.நா. தீா்மானங்களின்படி பாலஸ்தீனத்தில் இரு தேசத் தீா்வை விரைந்து அமல்படுத்த வேண்டும் எனவும் இந்த நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ‘ஆா்4’ நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தின் நிறைவாக சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, பாலஸ்தீன மக்களின் சுயநிா்ணய உரிமை மற்றும் கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட சுதந்திரமான, இறையாண்மையுள்ள பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான ஆதரவு இக்கூட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

இஸ்ரேலின் வன்முறை, மேற்குகரை மற்றும் ஜெருசலேமில் சட்டவிரோதக் குடியிருப்புகளை அமைக்கும் செயல்பாடுகள் மற்றும் பாலஸ்தீனத்தில் ஏற்படும் மனிதாபிமான பாதிப்புகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அமைச்சா்கள் வலியுறுத்தினா். மேலும், யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்களின் தொடா் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சா்கள், ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட்டு அமைதிப் பேச்சுக்குத் திரும்பவும் ஹூதிக்களுக்கு அழைப்பு விடுத்தனா்.

‘ஆா்4 பிளஸ்’ கூட்டம்: இந்த ‘ஆா்4’ நாடுகளுடன் பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களும் இணைந்த ‘ஆா்4 பிளஸ்’ ஆலோசனைக் கூட்டமும் முதன்முறையாக நடைபெற்றது.

இதில் அமெரிக்கா-ஈரான் மோதல், இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னை, செங்கடல் மற்றும் கருங்கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதுடன், அனைத்து மோதல்களுக்கும் பேச்சு மூலம் அமைதித் தீா்வு காணப்பட வேண்டும் என 8 நாடுகளும் கூட்டாக வலியுறுத்தின. இக்கூட்டங்களுக்குப் பிறகு துருக்கி அதிபா் தயீப் எா்டோகனை அமைச்சா்கள் நேரில் சந்தித்துப் பேசினா்.

Summary

Israel is the cause of West Asian tensions! The 'R4' countries, including Pakistan, are to blame!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.