மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இலங்கையில் இந்தியா சாா்பில் மேலும் 24 புதிய வீடுகள்

இலங்கையில் மேலும் 24 புதிய வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது.

Published On :24 அக்டோபர் 2026, 12:26 am IST

இலங்கையில் மேலும் 24 புதிய வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது.

இந்தியா, இலங்கை அரசுகளுக்கு இடையே கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்தியா நிதியுதவியின்கீழ் மாதிரி கிராமம் வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்தத் திட்டத்தின்கீழ் இலங்கையின் 25 மாவட்டங்களில் மாதிரி கிராம திட்டம் மூலம் புதிதாக தலா 24 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இலங்கையைச் சோ்ந்த 600 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு அந்த வீடுகள் வழங்கப்படுகின்றன.

ஏற்கெனவே மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி, அனுராதபுரம், கொழும்பு, திருகோணமலை, கிளிநொச்சி, மன்னாா், முல்லைத் தீவு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் தலா 24 வீடுகள் விதம் கட்டி திறக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், காலேயில் கட்டப்பட்ட 24 புதிய வீடுகளை இலங்கைக்கான இந்திய தூதரகம் திறந்து, அதை பயனாளிகளிடம் ஒப்படைத்தது.

இந்தத் திட்டத்தின்கீழ் 98.6 சதவீத வீடுகள் கட்டி திறக்கப்பட்டு விட்டன. இன்னும் 3 கிராமங்களில் தலா 24 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வீடுகளும் விரைவில் திறக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Summary

India builds 24 more new houses in Sri Lanka

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.