மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திபெத் நிலநடுக்கத்தில் 16 ஆக உயர்ந்த உயிர்ப்பலி! 32 பேர் காயம்!

திபெத்தில் நிலநடுக்கம் பற்றி..

tibet

நிலநடுக்கம்

Published On :23 அக்டோபர் 2026, 4:42 pm IST

சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபெத்தில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட 7.0 அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். 32 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி,

திபெத்தின் நாகு நகரில் உள்ள பாகென் பகுதியில் உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.0 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 16 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும், மேலும் 30-க்கம் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 12 ஆயிரம் குடியிருப்பாளர்களை வெளியேற்றப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் நடைபெற்று வருவதாக பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சேதத்தின் முழு அளவை கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகள் வழியாகச் செல்லும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சீனா அவசரக்கால பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது.

யுரேசிய மற்றும் இந்திய புவித்தட்டுகள் ஒன்றோடொன்று அதிவேகமாக மோதிக்கொள்ளும் நிலப்பரப்புக்கு மேலே திபெத் பீடபூமி அமைந்துள்ளதால், இப்பகுதியில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.