நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

இனி.. பணம் என்பதே இருக்காது! ஆட்டிப்படைக்கப்போகும் செய்யறிவு! கணித்திருப்பது யார்?

இனி.. பணம் என்பதே இருக்காது, ஆட்டிப்படைக்கப்போகும் செய்யறிவு என்று வரலாற்றுப் பேராசிரியர் கணித்திருப்பது பற்றி...

செய்யறிவு - படம் | ஏஎன்ஐ

Published On :21 அக்டோபர் 2026, 1:39 pm IST

உலகில் இனி பணம் என்பதே இருக்காது, அனைத்தையும் செய்யறிவு அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும், அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் உலகையே செய்யறிவு ஆட்டிப்படைக்கப்போகிறது என்று யுவால் நோவா ஹராரி கூறியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் கணிக்க இவர் யார்? ஜோதிடரா என்று கேள்வி எழலாம். இல்லை. இவர் வரலாற்றாசிரியர், அதிகம் விற்பனையாகும் நூல்களின் எழுத்தாளர்.

பல்வேறு தரவுகளையும் ஆராய்ந்து தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கும் யுவால் நோவா ஹராரி, அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் நிதி மற்றும் சட்ட அமைப்புகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

மனிதர்களுக்கு எதிராக, செயற்கை நுண்ணறிவு எனப்படும் செய்யறிவால், மிகவும் சிக்கலான கட்டமைப்புகளை உருவாக்கிட முடியும். தற்போது மனிதக் கட்டுப்பாடுகளை மீறும் அவை எவ்வாறு செயல்படுகின்றன, தங்கள் வாழ்வை பாதிக்கும் முடிவுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை மனிதர்களால் அறிந்துகொள்ளவே முடியாமலும் போகலாம் என்கிறார்.

ஜெருசலேம் நகரில் இயங்கி வரும் ஹீப்ரு பல்கலையின் வரலாற்றுப் பேராசிரியர், சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஹராரி, செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல், தற்போது நாம் மீம்ஸ்களில் பார்ப்பது போல ரோபோக்கள் மனிதர்களைத் தாக்குவது போன்றவையாக மட்டும் இருக்காது, அதற்கு நேர்மாறாக செய்யறிவு, மிகப்பெரிய நிறுவனங்களைக் கைப்பற்றி அதன் மூலம் மனிதர்களை ஆளும் என்றும் குறிப்பிடுகிறார்.

மனித சமூகம், மற்ற விலங்குகளை விட உடல் ரீதியாகவோ அல்லது அறிவு ரீதியாகவோ உயர்ந்தவர்களாக இருந்ததால் இந்த ஒட்டுமொத்த உலகையும் தங்கள் வசமாக்கினர், மனிதர்கள் இந்த உலகத்தைக் கைப்பற்றியதற்குக் காரணம், தனிநபர்களின் திறன்களால் அல்ல, மாறாக அதிகாரத்துவ அமைப்புகளை உருவாக்கி மற்றவர்களை அடிமைப்படுத்தியதே, நிதி, வங்கி, சட்டம், நீதிமன்றம், மதம், அரசு போன்ற அதிகாரத்துவ அமைப்புகளை உருவாக்குவதன் மூலம், லட்சக்கணக்கான மனிதர்கள் மிகவும் திறம்பட ஒன்றிணைந்து செயல்பட முடிகிறது.

ஆனால், காலப்போக்கில் செயற்கை நுண்ணறிவு இந்த அமைப்புகளை மனிதர்களிடமிருந்து பிடுங்கி, மனிதர்களைவிட மிகச் சிறப்பாகச் செயல்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

அதுபோல, தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியதைப் போல அடுத்த பத்தாண்டுகளில் பணம் என்பதே உலகில் இருக்காது என்ற கருத்துக்கும் அவர் ஆதரவாகக் கூறியிருக்கிறார்.

Summary

money wont exist AI is set to take control who predicted this

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.