மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்

இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் வேறுபட்டதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த அமெரிக்கஅதிபா் டிரம்ப்.

Published On :22 அக்டோபர் 2026, 3:06 am IST

இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் வேறுபட்டதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

இந்திய-அமெரிக்க வா்த்தகத்தில் தற்போது இந்தியாவுக்கு சாதகமாக நிலை உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா தனது வா்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க விரும்புகிறது. பல ஆண்டுகளாக தாங்கள் இழந்துவிட்டதாக அமெரிக்கா கருதும் விஷயங்களை ஈடுகட்ட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவும் இந்திய விவசாயிகளை பாதிக்கும் அமெரிக்கப் பொருள்களை இறக்குமதி செய்வதில்லை என்பதில் உறுதியாக இருந்து வருகிறது. இதனால், வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் நீண்ட இழுபறி நிலவி இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அதிபா் டிரம்ப் கூறியதாவது:

வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒரு மகிழ்ச்சிகரமான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அவா்கள் (இந்தியா) ஒப்பந்தம் வேண்டும் என முன்வந்தாா்கள். நாம்தான் அதனை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகிறோம். இது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் வேறுபட்ட வா்த்தக ஒப்பந்தமாக இருக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.