தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பங்கு: எலான் மஸ்க் உறுதி!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்கை அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் அடுத்த ஆண்டு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

elon musk

எலான் மஸ்க் - கோப்புப் படம்

Published On :19 அக்டோபர் 2026, 11:03 pm IST

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்கை அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் அடுத்த ஆண்டு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ தனது 5% பங்குகளை பொது நல நிதிக்காக வழங்கவிருப்பதாகத் தெரிவித்த நிலையில், எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆந்த்ரோபிக் அறிவிப்பின்படி பங்குகளின் மதிப்பு உயரும்போது, பொதுநல நிதியின் மதிப்பும் அதிகரிக்கும்.

ஆந்த்ரோபிக் நிறுவன பதிவுக்கு பதிலளித்த மஸ்க், பங்குகளை நேரடியாகப் பொதுமக்களுக்கே வழங்க பரிந்துரைக்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தங்களது காலாண்டு வருவாயை நாளை அறிவிக்கவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு $146.03-ல் (இந்திய மதிப்பில் ரூ. 13,800) வர்த்தகம் நிறைவடைந்தது.

எலான் மஸ்க் அறிவித்துள்ள பங்குகள் தொடர்பான உறுதுமொழி எவ்வாறு செயல்படுத்தப்படும் என்ற கூடுதல் விவரங்களை அவர் வழங்கவில்லை.

ஆனால், தனது பதிவில் இது பல விதங்களில் முதலானதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வரும் நிலையில், மஸ்க் மற்றும் ஆந்த்ரோபிக்கின் இந்த அறிவிப்புகள் வந்துள்ளன.

Summary

Elon Musk, the world's richest man, has pledged to give a share of his SpaceX company to every child in America next year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.