தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரஷியத் தாக்குதல்கள் பற்றி நட்பு நாடுகள் முன் எச்சரிக்கை எதுவும் வழங்கவில்லை: ஸெலென்ஸ்கி

உக்ரைனில் உள்ள எரிசக்தி மையங்களைக் குறிவைத்து ரஷியா நடத்தவிருந்த ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றி நட்பு நாடுகள் முன் எச்சரிக்கை எதுவும் வழங்கவில்லை என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

Ukraine's President Volodymyr Zelenskyy

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி - படம் - ஏபி

Published On :19 அக்டோபர் 2026, 4:50 pm IST

உக்ரைனில் உள்ள எரிசக்தி மையங்களைக் குறிவைத்து ரஷியா நடத்தவிருந்த ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றி நட்பு நாடுகள் முன் எச்சரிக்கை எதுவும் வழங்கவில்லை என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைன் மீது 16 ஏவுகணைகள், 200-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கூறினார். அவர் இதுதொடர்பான சமூக ஊடகப் பதிவில், “நேற்று இரவு மீண்டும் ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. எங்களின் நட்பு நாடுகளிடமிருந்து இதுபற்றி எந்த முன் எச்சரிக்கையும் வரவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, கடந்த வாரமும் ரஷியத் தாக்குதல்கள் பற்றி அமெரிக்காவிடமிருந்து எந்த எச்சரிக்கையும் வரவில்லை என்று உக்ரைன் கூறியிருந்தது. இதனால், அப்பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய நேரம் இருக்கவில்லை என உக்ரைன் குற்றச்சாட்டு வைத்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று பேசுகையில், உக்ரைனுடன் உளவுத் தகவல்களைப் பகிர்வதில் எந்தத் தடங்கலும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், உக்ரைனின் குற்றச்சாட்டுகள் பற்றி அவரிடம் கேட்டபோது, “ரஷியாவுடனான போரை நிறுத்துவதில் ஸெலென்ஸ்கி அதிக கவனம் செலுத்தவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

சமீபத்தில் உக்ரைன் - அமெரிக்கா இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், “ரஷியா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஸெலென்ஸ்கிக்கு அதில் அக்கறை இல்லை. வெளிப்படையாகச் சொன்னால், அவருக்கு ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு, போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அவருக்கு விருப்பமில்லை. அவர் ஒருபோதும் அதனை விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துப் பதிவிட்ட ஸெலென்ஸ்கி, "உக்ரைன் இந்தப் போரை ஒருபோதும் விரும்பவில்லை. இந்தப் போரை ஒரு கண்ணியமான விதத்தில் முடிவுக்குக் கொண்டுவர எங்கள் நட்பு நாடுகள் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் வரவேற்றுள்ளோம். பேச்சுவார்த்தையில் ரஷியாவின் பதில் மீண்டும் மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் படுகொலைகளாகவே இருந்து வருகிறது" என்று குறிப்பிட்டார்.

Summary

Ukrainian President Zelensky said that allies had given no advance warning of Russia's planned missile strikes on energy centers in Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.