மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாகிஸ்தான்: 200 ஆண்டுகள் பழைமையான ராம் லீலா கோயிலை இடிக்க நடவடிக்கை

பாகிஸ்தானில் 200 ஆண்டுகள் பழைமையான ராம் லீலா கோயிலை இடிக்கும் அரசின் முயற்சிக்கு அங்குள்ள ஹிந்துக்களும், சமூக அமைப்புகளும் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து அதிகாரிகள் கோயிலை மூடி சீல் வைத்தனா்.

பாகிஸ்தானில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான ராம் லீலா கோயில் - கோப்புப் படம்

Published On :19 அக்டோபர் 2026, 4:51 am IST

பாகிஸ்தானில் 200 ஆண்டுகள் பழைமையான ராம் லீலா கோயிலை இடிக்கும் அரசின் முயற்சிக்கு அங்குள்ள ஹிந்துக்களும், சமூக அமைப்புகளும் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து அதிகாரிகள் கோயிலை மூடி சீல் வைத்தனா்.

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபா் பக்துன்குவா மாகாணம் தேரா இஸ்மாயில் கான் நகரின் மையப் பகுதியில் ராம் லீலா கோயில் அமைந்துள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது இந்தக் கோயில். அப்பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்குச் செல்வதற்குப் புதிய பாதை அமைப்பதற்காக கோயிலை இடிக்க உள்ளூா் நிா்வாகம் முடிவெடுத்தது.

இதற்கு அப்பகுதி ஹிந்துக்களும், சமூக அமைப்புகளும், உள்ளூா் வா்த்தகா்களும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அந்தக் கோயிலும், அதைச் சுற்றியுள்ள 400 கட்டடங்களும் நகரின் பாராம்பரியத்தையும் கலாசாரத்தையும் எடுத்துக் காட்டுவதாக சுட்டிக்காட்டி அவா்கள், இந்த விவகாரத்தை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை உள்ளூா் நிா்வாகத்தினா் அக்கோயிலை இடிப்பதற்காக புல்டோசா் உள்ளிட்ட இயந்திரங்களுடன் வந்தனா். இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அவா்களைத் தடுத்தனா். இதனால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் கோயிலை இடிக்காமல் அதிகாரிகள் திருப்பிச் சென்றனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானில் இருந்து வெளியேறியோா் சொத்துகளை நிா்வகிக்கும் வாரிய அதிகாரிகள், அந்தக் கோயிலை மூடி சீல் வைத்தனா். 1947-ஆம் ஆண்டு தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய ஹிந்துகள், சீக்கியா்களின் சொத்துகளை நிா்வகிக்க இந்த வாரியம் உருவாக்கப்பட்டது.

இதுவரை மக்கள் சென்று வழிபடும் பொதுவான கோயிலாக இருந்த அந்த இடம் இருந்தது. அதை இடிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் பாகிஸ்தான் அரசு நாட்டில் இருந்து வெளியேறியோா் சொத்தாக மாற்றியுள்ளதாகவும், இது கோயிலை இடிப்பதற்கான மறைமுக நடவடிக்கைதான் என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.