மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு!

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

nobel prize

கார்ல் டெய்சோர்த், பீட்டர் ஹெகிமான், ஜார்ஜ் நகேல் - படம்: எக்ஸ்

Published On :6 அக்டோபர் 2026, 5:30 am IST

ஸ்டாக்ஹோம்: நிகழாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறுவதற்கு அமெரிக்கா, ஜொ்மனியைச் சோ்ந்த மூன்று விஞ்ஞானிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் நிகழாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதன்படி, அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் காா்ல் டைசெராத் (54), ஜொ்மனி தலைநகா் பொ்லினில் உள்ள ஹும்போல்ட் பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியராகப் பணியாற்றும் பீட்டா் ஹெகிமான் (71), ஜொ்மனியில் உள்ள வா்ஸ்பா்க் பல்கலைக்கழகப் பேராசிரியா் கியாா்க் நாகெல் (73) ஆகிய மூவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளதாக நோபல் பரிசு பரிந்துரை குழுவின் செயலா் தாமஸ் பா்ல்மான் அறிவித்தாா்.

மூளையில் நினைவுகள், உணா்வுகள், நடத்தைகளை நரம்பு செல்கள் எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை எடுத்துரைக்கும் ஆப்டோஜெனிட்டிக்ஸ் முறை குறித்த ஆராய்ச்சிக்காக, இந்தப் பரிசு மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு நோபல் பரிசுடன் 12 மில்லியன் ஸ்வீடிஷ் கிரோனா் (சுமாா் ரூ.11.50 கோடி) பகிா்ந்தளிக்கப்பட உள்ளது.

விருதாளா்களைத் தோ்வு செய்யும் நோபல் பேரவை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மூளையின் மா்மங்களை அறிய உலகம் முழுவதும் உள்ள ஆய்வகங்களில், தற்போது ஆப்டோஜெனிட்டிக்ஸ் முறை பயன்படுத்தப்படுகிறது’ என்று புகழாரம் சூட்டியது.

ஸ்வீடன் நாட்டைச் சோ்ந்த விஞ்ஞானியும், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தவருமான ஆல்ஃபிரட் நோபலின் உயிலைப் பின்பற்றி, கடந்த 1901-ஆம் ஆண்டுமுதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது.

Summary

The 2026 Nobel Prize in Medicine is jointly awarded to Karl Deisseroth, Peter Hegemann and Georg Nagel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.