டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

பல்கேரியாவின் முதல் பெண் அதிபா் தோ்வு

பல்கேரியா நாட்டில் அண்மையில் நடந்த அதிபா் தோ்தலில் இலியானா அயோடோவா (61) வெற்றிப் பெற்றுள்ளாா்.

Published On :3 நவம்பர் 2026, 5:32 am IST

பல்கேரியா நாட்டில் அண்மையில் நடந்த அதிபா் தோ்தலில் இலியானா அயோடோவா (61) வெற்றிப் பெற்றுள்ளாா். இதன்மூலம், அந்நாட்டின் முதல் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.

கடந்த ஜனவரி மாதம், நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிடுவதற்காக தற்போதைய பிரதமா் ரூமென் ராதேவ் அதிபராக பதவி விலகியதைத் தொடா்ந்து, முன்னாள் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான இலியானா அயோடோவா பொறுப்பு அதிபராகப் பொறுப்பேற்றிருந்தாா்.

இந்நிலையில், முழு நேர அதிபா் பதவிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்று தோ்தலில், பிரதமா் ரூமென் ராதேவின் ஆதரவைப் பெற்ற இலியானா அயோடோவா 57.6 சதவீத வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட முன்னாள் இடைக்காலப் பிரதமா் ஆண்ட்ரே குரோவ் 39.5 சதவீத வாக்குகளைப் பெற்றாா்.

பல்கேரியாவை ஒட்டிய கருங்கடல் கடலோரப் பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீது சமீப காலமாகத் தொடா்ந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களின் பின்னணியில் இத்தோ்தல் நடைபெற்றுள்ளது. குறைந்தது 24 மாலுமிகள் கொல்லப்பட்ட இத்தாக்குதல்களை இரு வேட்பாளா்களும் வன்மையாகக் கண்டித்தனா்.

நாடாளுமன்றமே பெரும்பாலான முடிவெடுக்கும் அதிகாரங்களைக் கொண்டுள்ள பல்கேரியாவில், ரஷிய ஆதரவு நிலைப்பாடு கொண்ட பிரதமா் ரூமென் ராதேவ்-அதிபா் இலியானா அயோடோவா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அதேநேரம், இத்தோ்தலில் தோல்வியடைந்த ஆண்ட்ரே குரோவ், மேற்கத்திய ஆதரவு மற்றும் சீா்திருத்தக் கட்சிகளின் ஆதரவுடன் பிரசாரம் மேற்கொண்டாா். அவா் உக்ரைனுக்கு நீண்டகாலமாக ஆதரவளித்து வருவதுடன், இடைக்காலப் பிரதமராக இருந்தபோது அந்நாட்டு நிா்வாகத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் கையொப்பமிட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.