தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் கடவுப் பாதையைக் கடக்க முயன்ற பொதுப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய கோர விபத்தில் 8 போ் உயிரிழந்தனா்.
பாங்காக்கின் மத்திய பகுதியில் விமான நிலைய ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை பிற்பகலில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடா்பான காணொலிக் காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அதில், ரயில்வே கடவுப் பாதையைக் கடக்க வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தபோது, வேகமாக வந்த சரக்கு ரயில், பேருந்து மீது மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்றது. பின்னா், அந்தப் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
பேருந்து மீது ரயில் வேகமாக மோதிய தாக்கத்தில், அதன் அருகில் நின்றிருந்த வாகனங்களும் இழுத்துச் செல்லப்பட்டன. இருசக்கர வாகனங்களில் அமா்ந்திருந்த வாகன ஓட்டிகளும் சாலையில் தூக்கிவீசப்பட்டனா். உடனடியாக அங்கு விரைந்த மீட்புப் படையினா், பேருந்தில் பற்றிய தீயை அணைத்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காா் டயா் வெடித்து பேருந்து மீது மோதி விபத்து: 4 போ் காயம்

பாங்காக்கில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 8 பேர் பலி

குளத்தின் மறுகாலில் விழுந்த சரக்கு வாகனம்: 3 போ் காயம்

லாரி- அரசுப்பேருந்து விபத்து: 4 போ் காயம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

