வடமேற்கு பாகிஸ்தானில் மரம் வெட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதில் எதிரெதிர் குழுக்கள் துப்பாக்கிச்சூடு நடத்தின. இதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (மே 12) தெரிவித்தனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள நௌஷேரா மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது:
“மரம் வெட்டுதல் தொடர்பாக இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறியதில் ஏழு பேர் கொல்லப்பட்டதோடு மூன்று பேர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நௌஷேரா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தனர்.
Summary
Seven people were killed in Pakistan after a dispute over tree-cutting turned violent.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் 20,000 எச்ஐவி நோயாளிகள் மாயம்!

லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் பாகிஸ்தானில் கொலை!

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: 5 பேர் பலி

பாகிஸ்தான்: குடும்பத் தகராறில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


