தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

50 கார்களில் அணிவகுத்த பாஜக நிர்வாகி! இதுதான் அந்த சிக்கனமா?

மத்தியப் பிரதேசத்தில் 50 கார்களில் அணிவகுத்த பாஜகவின் சௌபாக்ய சிங் தாகூர் செயலுக்குக் கடும் விமர்சனம்

News image

பாஜக - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 3:15 pm IST

ஈரான் - அமெரிக்க போர் காரணமாக பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தியிருந்த நிலையில், மத்தியப் பிரதேச பாஜக தலைவர் ஒருவரின் செயல் நகைமுரணாக அமைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தெலங்கானாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய சூழலில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை அதிகபட்ச சிக்கனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்பது காலத்தின் தேவையாக உள்ளது.

உலக அளவில் பெட்ரோல் - டீசல் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. எனவே அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். பெட்ரோல் - டீசலை வீணாக்காமல் சேமிப்பதன் மூலம் அவற்றை வாங்குவதற்கு செலவிடப்படும் அந்நிய செலாவணியை சேமிக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இது பற்றி இரண்டு நாள்களாக மக்கள் பேசி வரும் நிலையில், மத்திய பிரதேச மாநில பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உஜ்ஜைனிலிருந்து போபாலுக்கு செல்லும்போது 50 சொகுசு கார்கள் அணிவகுக்க பல ஊர்களை அதிரவிட்டுள்ளார்.

நெடுஞ்சாலையில் மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட ஏராளமான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றுகொண்டேயிருக்கிறது. ஏராளமான வாகனங்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்து கொண்டிருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இது சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி சொன்ன எரிபொருள் சிக்கனம் இதுதானா என்றும், அவர் சொன்ன அறிவுரை நாட்டு மக்களுக்குத்தானா? அவரது நிர்வாகிகள், தலைவர்களுக்கு இல்லையா என்றும் பலரும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.