தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: 5 பேர் பலி

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதலில் 5 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

பாகிஸ்தான். - IANS

Updated On :3 ஏப்ரல் 2026, 9:23 pm IST

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதலில் 5 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானில் காவல் நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர் என்று வியாழக்கிழமை இரவு காவல் துறை தெரிவித்தது.

கைபர் பக்துன்க்வாவின் பன்னு மாவட்டத்தில் உள்ள டோமெல் வட்டத்தில் காவல் நிலையத்தின் பின்புறத்தில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் மூலம் இந்த தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதனால் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது என்று காவல் துறை கூறியது.

பல மைல்கள் தொலைவு வரை கேட்கப்பட்ட இந்த வெடிப்பின் தீவிரம், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இது அப்பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை.

வெடிவிபத்தில் காயமடைந்த 13 பேரில் நான்கு காவல் துறைப் பணியாளர்களும் அடங்குவர். அதிகாரிகள் நிலைமையைத் தொடர்ந்து மதிப்பிட்டு வருவதால், அவசரகால மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Summary

A suicide car bomb blast targeting a police station in northwest Pakistan killed five persons, including four from the same family, and wounded 13 others late Thursday, police said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.