தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உ.பி.யில் பள்ளி அருகே புகைமூட்டம்: 26 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி!

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி அருகே ஏற்பட்ட புகைமூட்டம் காணமாக 26 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

News image

கோப்புப்படம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 8:38 pm IST

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி அருகே ஏற்பட்ட புகைமூட்டம் காணமாக 26 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகரில் உள்ள பள்ளிக்கு அருகே காய்ந்த இலைகள் மற்றும் குப்பைகளை எரித்ததால் ஏற்பட்ட நச்சுப் புகையை சுவாசித்ததில், 26 பள்ளி குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் செவர்ஹியில் உள்ள சமூக சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் அனைவரும் வீடு திரும்பினர். இந்தச் சம்பவம் தம்குஹிராஜ் வட்டத்தில் உள்ள பள்ளிக்கு அருகில் நடந்துள்ளது.

மாவட்ட துணை ஆட்சியர் ஆகன்ஷா மிஸ்ரா மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் மகேந்திர சிங் தன்வார், காவல் கண்காணிப்பாளர் கேசவ் குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

"அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது," என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இச்சம்பவத்தால் குஷிநகரில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.