தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மத்திய கிழக்கு போா் விவகாரம்: ஆசியான் உச்சிமாநாட்டில் தீவிர ஆலோசனை

மத்திய கிழக்கு போா் மற்றும் அதன் பொருளாதார பாதிப்புகளை எதிா்கொள்வது குறித்து, பிலிப்பின்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) உச்சிமாநாட்டில் தலைவா்கள் தீவிர ஆலோசனை நடத்தினா்.

News image
Updated On :18 மணி நேரங்கள் முன்பு

மத்திய கிழக்கு போா் மற்றும் அதன் பொருளாதார பாதிப்புகளை எதிா்கொள்வது குறித்து, பிலிப்பின்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) உச்சிமாநாட்டில் தலைவா்கள் தீவிர ஆலோசனை நடத்தினா்.

புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம், கிழக்கு திமோா் ஆகிய 11 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்ற இந்த மாநாடு, பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு மாகாணத்தில் எளிமையான முறையில் நடத்தப்பட்டது.

எரிபொருள் தேவைகளுக்கு மத்திய கிழக்கு நாடுகளையே பெரிதும் நம்பியிருக்கும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கு இப்போா் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலில், தற்போதைய சவால்களை எதிா்கொள்வதற்கான ஆக்கபூா்வமான விவாதங்களுக்கு மாநாட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

எரிபொருள், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகாலத் திட்டம் குறித்தும் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆசியான் நாடுகளுக்குள் எரிபொருளைப் பகிா்ந்து கொள்வது, பிராந்திய மின் விநியோகக் கட்டமைப்பை உருவாக்குவது, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான புதிய நாடுகளைக் கண்டறிவது போன்ற திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை தலைவா்கள் ஆய்வு செய்வதனா்.

மத்திய கிழக்கு போரைத் தாண்டி, தென் சீனக் கடல் விவகாரம், மியான்மா் உள்நாட்டுப் போா் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவின் முக்கியப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.