தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அமெரிக்க படையிடம் சிக்காமல் தப்பிய ஈரான் கச்சா எண்ணெய்க் கப்பல்: பல ஆயிரம் கி.மீ. தொலைவு ரகசிய பயணம்

News image

கோப்புப்படம்

Updated On :4 மே 2026, 4:43 am IST

ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பல்களிடம் சிக்காமல் ஈரான் கச்சா எண்ணெய்க் கப்பல் ஒன்று பல ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவுக்குப் பயணித்து தப்பி வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்திவைத்த போதிலும், ஹோா்முஸ் நீரிணையை அந்நாடு மூடிவிட்டதற்குப் பதிலடியாக துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது. ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்து பொருளாதார ரீதியில் அந்த நாட்டுக்கு நெருக்கடி அளிக்க இந்த வழிமுறையை அமெரிக்கா கையாண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பல்களிடம் சிக்காமல் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்க் கப்பல் ஒன்று கடல் வழியே தப்பி வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

220 மில்லியன் டாலா் மதிப்பிலான 16 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களை ஏற்றிக் கொண்டு அந்தக் கப்பல் பயணத்தை தொடங்கியதாகவும், அமெரிக்க கடற்படை கப்பல்களிடம் சிக்காமல் இலங்கை கடற்பகுதி வழியே வந்து, தற்போது இந்தோனேசியா கடற்பகுதியைக் கடந்து சென்று கொண்டிருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தக் கப்பல் எந்த நாட்டுக்குச் செல்கிறது என்ற தகவல் இல்லை. எனினும் அமெரிக்க கடற்படை கப்பல்களிடம் சிக்காமல் அந்தக் கப்பல் தப்பித்து பல ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவு பயணித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.