இராக் கடல் பகுதியில் வந்து கொண்டிருந்த அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீது ஈரான் படைகள் நடத்திய தாக்குதலில் அதிலிருந்த இந்திய ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா்.
இந்தத் தகவலை இராக்கில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியது. அந்தக் கப்பலில் இருந்து மேலும் 15 இந்திய ஊழயிா்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்றும் தூதரகம் தெரிவித்தது.
அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திவரும் தாக்குதலுக்கு எதிா்வினையாக, சரக்கு கப்பல்களின் முக்கிய வழித்தடமாக விளங்கும் பாரசீக வளைகுடாவின் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இந்தப் பகுதியில் செல்லும் வணிக கப்பல்கள் மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் படைகளும், ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிக்களும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக, இந்தியாவின் 28 கப்பல்கள் உள்பட பல்வேறு நாடுகளின் கப்பல்கள் மேற்கொண்டு இயக்க முடியாமல் பாரசீக வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அந்தப் பகுதியாக வந்த அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய தூதரகம் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த ‘ஸேஃப் ஸீ விஷ்ணு’ என்ற கப்பல் இராக்கின் பஸ்ரா அருகே கடல் பகுதியில் புதன்கிழமை வந்தபோது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ஈரான் ஆளில்லா படகை மோதவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த இந்திய ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். மற்ற 15 இந்திய ஊழியா்களும் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்’ என்று குறிப்பிட்டுள்ளது.
Summary
An Indian sailor working on an American oil tanker has been killed in an attack.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்க படையிடம் சிக்காமல் தப்பிய ஈரான் கச்சா எண்ணெய்க் கப்பல்: பல ஆயிரம் கி.மீ. தொலைவு ரகசிய பயணம்

போர்நிறுத்தத்தை நீட்டித்த டிரம்ப்! 2 கப்பல்களைத் தாக்கிய ஈரான்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?

குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


