அமெரிக்காவைச் சார்ந்த பெரும் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை நிறுவனங்களைக் குறிவைத்து ஏப். 1 முதல் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் புரட்சிகர காவல் படை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ நிலைகள் அமைந்துள்ள இடங்கள் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்கி வருகிறது. அதேபோல், ஈரானிலுள்ள உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல், அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகச் சுட்டிக்காட்டி, இதையடுத்து இனிமேல் இந்நிறுவனங்களே தங்களது முதன்மை இலக்குகளாகத் தாக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள 18 நிறுவனங்களின் பட்டியலில் மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள், இண்டெல், ஐபிஎம், டெஸ்லா, போயிங் உள்பட முக்கிய பெரு நிறுவனங்களும் அடங்கும். ஈரானிய நேரப்படி, ஏப். 1 இரவு 8 மணியிலிருந்து(இந்திய நேரப்படி இரவு 10 மணி) தாக்குதல்கள் ஆரம்பமாகும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது ஈரான். ஆகவே, அங்குள்ள ஊழியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளது ஈரான்.
Summary
Iran says it will target American IT companies if US continues to attack their infrastructure.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
ஈரான் போரில் ஈடுபடும் அமெரிக்க விமானங்கள் ஸ்பெயின் வான்வெளியில் பறக்கத் தடை!

அமெரிக்க தரைப்படை களமிறங்கினால் கடும் பதிலடி: ஈரான் எச்சரிக்கை!

தொடரும் போர்.. ஈரான் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

