ஈரான் மீது தாக்குதல் நடத்த ஸ்பெயின் வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்க விமானங்களுக்குத் தடை விதித்து ஸ்பெயின் உத்தரவு.
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க விமானங்கள் ஸ்பெயின் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்த ஸ்பெயின் அரசு தடை விதித்துள்ளது.
இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசிய ஸ்பெயின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்கரிட்டா ரோபல்ஸ், “ஈரான் போர் தொடர்பாக ஸ்பெயின் வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதியில்லை” என்று தெரிவித்தார்.
ஸ்பெயின் வான்வெளி அனுமதி மறுத்ததால் மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும் அமெரிக்க ராணுவத்தின் விமானங்கள் தங்களது வழக்கமான வான்வெளித் தடத்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது அவர்களுக்குச் சிக்கலை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், அவசர காலங்களில் மட்டுமே விமானங்கள் ஸ்பெயின் வான்வெளியைப் பயன்படுத்தவும் தங்களது தளங்களில் இறங்கவும் முடியுமென்று ஸ்பெயின் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் முக்கியமான மேற்கத்திய தலைவராக இடதுசாரி ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உருவெடுத்துள்ளார்.
ஸ்பெயினின் இந்த நிலைப்பாடு அவர்களின் நீண்டகால நேட்டோ கூட்டாளியான அமெரிக்காவை ஆத்திரமூட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் சமீபமாக ஏற்பட்டுள்ள கொள்கை மோதலின் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஸ்பெயினுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்கவிருப்பதாக அச்சுறுத்தல் விடுத்தார்.
முன்னதாக, அமெரிக்காவின் கோரிக்கையான நேட்டோ நாடுகளின் பாதுகாப்புச் செலவினங்களை அதிலுள்ள உறுப்பு நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5%-ஆக உயர்த்துவதற்கு ஸ்பெயின் ஒப்புக்கொள்ள மறுத்தது. இது ஏற்கனவே டிரம்ப்பின் கோபத்தைத் தூண்டியது குறிப்பிடத்தக்கது.
Summary
Spain shuts airspace for US planes involved in Iran war
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்!

போர்நிறுத்தம்! அமீரகம், ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தொடரும் தாக்குதல்!

அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!

தொடரும் போர்.. ஈரான் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

