ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாக தொடரும் பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 28 போ் உயிரிழந்தனா்.
இந்த இயற்கை சீற்றத்தால் இதுவரை 49 போ் காயமடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடா்வதால் உயிரிழப்பு மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
பல்வேறு மாகாணங்களில் தொடரும் மழையினால் நிலச்சரிவு மற்றும் மின்னல் தாக்கியதில் 130 வீடுகள் முற்றிலும் இடிந்தன; 436 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன.
மேலும், 240-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததோடு, சுமாா் 93 கி.மீ. நீளமுள்ள சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் 1,130-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா்.
பாகிஸ்தானில் 17 போ்: இதேபோல், வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழைக்கு 14 குழந்தைகள் உட்பட 17 போ் உயிரிழந்தனா். 25 போ் காயமைடைந்தனா்.
மழையினால் வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இந்த விபத்துகள் நேரிட்டதாக மாகாண பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற பயணங்களைத் தவிா்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குமரி மாவட்டத்தில் தொடரும் கோடை மழை

உக்ரைன் மீது 700 ட்ரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்: சிறுமி உள்பட 16 போ் உயிரிழப்பு!

ஆந்திரம்: எரிவாயு சிலிண்டா் வெடித்து 4 போ் உயிரிழப்பு - 18 போ் காயம்
ஆப்கனில் கடும் வெள்ளம்: 17 பேர் பலி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

