குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் பலியானவர் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நீடித்து வருகின்றது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீர் குடிநீராக்கும் நிலையம் மீது திங்கள்கிழமை அதிகாலை ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார்.
அவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தன செல்வம் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் பணியாற்றி வரும் அவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த சந்தன செல்வத்தின் உடலை குவைத்தில் உள்ள மத்திய சவக்கிடங்குக்கு சென்று இந்தியத் தூதர் பார்வையிட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், சந்தன செல்வத்தின் உடலைக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் இந்திய தூதரகம் ஒருங்கிணைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மேற்காசியப் போரில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Kuwait: Man from Mudukulathur Killed in Iranian Attack!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குவைத்தில் போர்நிறுத்தத்தை மீறி ஈரான் தாக்குதல்: எண்ணெய் வளாகங்கள், மின் நிலையங்கள் பலத்த சேதம்!

ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!

டிரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து ஈரான் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்; 25 பேர் பலி!

குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


