அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 25 பேர் பலியாகினர்.
அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் நகரங்கள் மீது நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மேலும் 25 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியத் தாக்குதலில் 2 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் அரசு நிலைகளின் மீதான தாக்குதல்கள் நிறைவடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்த போதும் இன்று மீண்டும் ஈரான் குடியிருப்புப் பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், பல்கலைக்கழகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தலைநகரான தெஹ்ரானில் சில பகுதிகளுக்கு எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் ஈரான் திறக்காவிட்டால் அவர்களை நரகத்திற்கு அனுப்புவதாக எச்சரித்த நிலையில், அவரது மிரட்டலை நிராகரிக்கும் விதமாக பிராந்தியம் முழுவதும் பேரழிவு ஏற்படும் என்று ஈரான் பதிலளித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஈரான் செய்தித் தொடர்பாளர், “பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் எங்களின் அடுத்தகட்ட தாக்குதல்கள் மற்றும் நடவடிக்கைகளால் மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்க நேரும்” என்று எச்சரித்துள்ளார்.
Summary
US-Israeli strikes on Iran cities kill at least 25 as Tehran rejects Trump's deadline
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அணுசக்தி, ஏவுகணைத் திட்டங்கள் நாட்டின் சொத்து - ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி

போர்நிறுத்தத்தை நீட்டித்த டிரம்ப்! 2 கப்பல்களைத் தாக்கிய ஈரான்!

பிடிவாதம் தளர வேண்டும்!

கப்பல்கள் மீதான தாக்குதல் போா் நிறுத்த விதிமீறல்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


