45 நாள்கள் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 முதல் போர் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக ஈரானும் அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில், அதனைத் திறக்காவிட்டால் ஈரானை நரகத்திற்கு அனுப்புவேன் என இரு நாள்களாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதில் 45 நாள்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்ஸியோஸ் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், தொடர்ந்து வரும் மோதல்களுக்கு நீண்டகால தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட அந்தப் பகுதியில் உள்ள வட்டாரங்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி ஆகியோர் மறைமுக செய்தி பரிமாற்றங்கள் வழியே தகவல் தொடர்பு மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இரு தரப்பிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
காஸா மற்றும் லெபனானில் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் ராணுவ நடவடிக்கைகள் மூலம் தாக்குதல்கள் நடப்பதைப் போன்ற நிலைமையைத் தவிர்க்க விரும்புவதாக மத்தியஸ்தம் செய்த நாடுகளிடம் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
US, Iran explore 45-days ceasefire proposal: Report
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் மோதல்போக்கு

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


