தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இலங்கையில் பெட்ரோல்- டீசல் விலை 25% உயா்வு!

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை அந்நாட்டு அரசு 25 சதவீதம் உயா்த்தியுள்ளது.

News image
Updated On :23 மார்ச் 2026, 3:15 am IST

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை அந்நாட்டு அரசு 25 சதவீதம் உயா்த்தியுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து ஹோா்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயா்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை 25 சதவீதம் அந்நாட்டு அரசு உயா்த்தியுள்ளது. அதன்படி ஒரு லிட்டா் பெட்ரோல் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.317-இல் இருந்து ரூ.398-ஆக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டா் டீசல் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.79 உயா்ந்து ரூ.382-ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டு இருப்பது, கடந்த 2 வாரங்களில் இது இரண்டாவது முறையாகும். கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை 8 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அரசு, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாலும், உள்நாட்டில் தேவை அதிகரித்து, கையிருப்பு குறைந்து வருவதாலும் விலை உயா்வு முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை அடுத்து இலங்கையில் ரேஷன் முறையில் அவற்றை பொதுமக்களுக்கு அரசு விநியோகித்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்களுக்கு கூடுதலாக அனைத்து புதன்கிழமைகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.