தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாக். கடற்படையின் பாதுகாப்பில் கராச்சி வந்த எண்ணெய்க் கப்பல்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கராச்சி வந்த எண்ணெய்க் கப்பல்களுக்கு பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு அளித்தது குறித்து...

News image

கராச்சி வந்த எண்ணெய்க் கப்பல்களுக்கு பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு அளித்துள்ளது... - AP

Updated On :13 மார்ச் 2026, 7:56 pm IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு துறைமுகம் வந்த 2 எண்ணெய்க் கப்பல்களுக்கு, பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகளுக்கும், ஈரானின் படைகளுக்கும் இடையிலான போரால், எரிபொருளுக்காக வளைகுடா நாடுகளைச் சார்ந்துள்ள பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா நகரத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் வந்த 2 எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் பாதுகாப்பு அளித்துள்ளன.

ஆபரேஷன் முஹாஃபிஸ்-உல்-பஹ்ர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கை மூலம் 100 மில்லியன் மற்றும் 120 மில்லியன் லிட்டர்கள் அளவுகளிலான எண்ணெய்யைக் கொண்டு வந்த கப்பல்கள் பத்திரமாக பாகிஸ்தான் வந்து சேர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நடவடிக்கையானது ஹோர்மூஸ் நிரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு அளிப்பதாகக் கருதப்படக் கூடாது என அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.

முன்னதாக, பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போரால், பாகிஸ்தானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Pakistan Navy provided security to two oil tankers from the United Arab Emirates.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.