மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரால், லெபனானில் ஒரே நாளில் 1 லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவத் தளங்களின் மீது ஈரானின் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருவதால் அங்கு வசித்து வரும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனால், லெபனானில் 24 மணிநேரங்களில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுபற்றி, ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பிரதிநிதி கரோலினா லிந்தோல்ம் பில்லிங் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) கூறியதாவது:
“லெபனானில் இன்று வரை 6,67,000-க்கும் அதிகமான மக்கள் அரசின் இணையத்தளத்தில் தங்களை இடமாற்றம் செய்யப்பட்டவர்களாகப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த எண்ணிக்கை ஒரே நாளில் 1,00,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இது கடந்த 2024 ஆம் ஆண்டு உடன் ஒப்பிடுகையில் மிகவும் வேகமான இடமாற்றம்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிரான தாக்குதல்களை அதிகரிக்கவுள்ளதால் தெற்கு லெபனானில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை காலை இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
The United Nations has reported that more than 100,000 people were displaced in Lebanon in a single day due to war.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 398! ஒரே நாளில் 25% உயர்த்திய இலங்கை!

வளைகுடா போரால் லெபனானில் 7.8 லட்சம் பேர் இடமாற்றம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


